Sமுல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களில் ஆயிரத்திற்கு மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கொக்குளாய்,கொக்குத்தொடுவாய்,நாயாறு,குமுழமுனை,தண்ணிமுறிப்பு,ஒதியமலை வரையான எல்லைப்பகுதிகளில் முப்பதாயிரித்திற்கு மேற்பட்ட கால்நடைகள் காணப்படுகின்றன. பல பண்ணையாளர்கள் கால்நடைகளை வளர்க்கமுடியாத சூழலில் காணப்படுகின்றார்கள்.
குறிப்பாக எருமை மாடுகள்,மற்றும் நாட்டு மாடுகள்,கிளாறி இனமாடுகள் என பண்ணையாளர்கள் பட்டியாக வளர்த்து வருகின்றார்கள் கொக்குளாய் கடல்நீர் ஏரியும் மற்றும் கோட்டைக்கேணி,எரிஞ்சகாடு,நாயாற்று வெளி,மற்றும் ஆண்டான்குளம்,குமுழமுனை,தண்ணிமுறிப்பு,ஒதியமலை போன்ற பிரதேசங்களில் வயல் செய்கை காலங்களில் வளர்கப்பட்ட பட்டி மாடுகள் தற்போது நெற்செய்கை அறுவடையின் பின்னர் தொடர்ச்சியாக இறந்து வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் இன்னிலையில் கால்நடைகள் நாள்தோறும் இறந்து கொண்டு செல்வதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்கள்.