காலி – ரம்சலா கடற்பரப்பில் சட்டவிரோதமான மீன்பிடி உபரணத்தை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட உக்கிரேனிய பிரஜையொருவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த வெளிநாட்டு பிரஜை சுற்றுலாவிற்காக இலங்கை வந்துள்ள நிலையில் காலி – ரம்சலா கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமான தூண்டிலை உபயோகித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டபோதே கடற்படையினர் அவரை கைதுசெய்துள்ளனர்.
அத்துடன் அவரிடமிருந்த சட்டவிரோத மீன்பிடி உபகரணமும், குறித்த உபகரணத்தை பயன்படுத்தி பிடித்த மீன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.