வரவுசெலவுத் திட்டத்தில் ஜனாதிபதிக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தை தோற்கடிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவ்விடயத்தில் நாங்கள் அனைவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவாக செயற்படுவோம் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 2015 ஆம் ஆண்டு தொடக்கம் அரசாங்கம் 04 வரவு செலவு திட்டங்களை சமர்ப்பித்து வெற்றிக் கண்டுள்ளது. ஆனால் இந்த வரவு செலவு திட்டத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் ஏதும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
நாளை சமர்ப்பிக்கப்படும் வரவு செலவு திட்டம் அரசாங்கத்தின் இறுதி அரசியல் அத்தியாயத்தினை உறுதிப்படுத்தும்.பாராளுமன்றத்தில் ஆளும் தரப்பினரை விட எதிர்தரப்பினருக்கே தற்போது அதிக பெரும்பான்மை காணப்படுகின்றது. இந்நிலையில் அரசாங்கம் வரவு செலவு திட்டத்தை வெற்றிக் கொள்வது பாரிய சவால் மிக்கதாகவே காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.