கொக்கேன் போதைப்பொருளுடன் 3 பெண்கள் உட்பட 17​ பேர் கைது

224 0

மாத்தறை- பொல்ஹேன பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றில் தங்கியிருந்த 17 பேர் நேற்று பகல் மாத்தறை ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 17 பேரிடமும் கொக்கைன் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்கள் காணப்பட்டதாகபொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களுள் 3 பெண்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் 17 பேரும் வெவ்வேறு பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், இவர்கள் இன்றைய தினம் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்