100 நாள் திட்டத்தின் ஊடாகவே 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன் பிறகே போதைப்பொருள் பாவனை நாட்டினுள் வியாபித்தது என எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதை அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
வெள்ளை வேன் விவசாரம், போதைப்பொருள் பாவனை போன்ற விடயங்களை மையப்படுத்தி கடந்த அரசாங்கத்தை தொடர்ந்து குற்றவாளியாக விமர்சித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தில் தற்போது ஜனநாயகத்திற்கு அமைவான செயற்பாடுகளா இடம்பெறுகின்றது என்பது கேள்விக்குறிபாக்கப்பட்டுள்ளது.
சாதாரண வியாபாரிகள் அதிகாரம் கொண்டவர்களினாலே கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டுள்ளனர். இச்செயற்பாடு தற்போது பாரிய மர்மங்கள் நிறைந்ததாக காணப்படுகின்றது.
1988 மற்றும் 1989 ஆகிய காலப்பகுதிகளில் மக்கள் எவ்வாறு அச்ச நிலையில் வாழ்ந்தார்களோ அச்சூழ்நிலையே தற்போதும் காணப்படுகின்றது என்றார்.