மாக்கந்துர மதுஷ் உள்ளிட்ட சந்தேக நபர்களை தொடர்ந்தும் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க டுபாய் பொலிசார் தீர்மானித்துள்ளனர். மேலும் டுபாய் உள்ளிட்ட பல நாடுகளில் காணப்படும் மாக்கந்தர மதுஷின் சொத்துக்கள் மற்றும் கடத்தல் வலையமைப்பே நோக்கி வலைவிரிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று சந்தேக நபர்களை நாட்டிற்கு கொண்டு வருவது குறித்து இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற அதே சமயம் , மாக்கந்துர மதுஷின் உள்ளுர் சகாக்களை தேடி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மாதிபர் லத்தீப்பின் வழிநடத்தலில் விஷேட அதிரடிப்படையின் சிறப்பு குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
மாக்கந்தர மதுஷின் முக்கிய சகாவான புளுமெண்டல் சங்கா இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. மதுஷின் கைதின் பின்னர் உள்ளுர் மற்றும் சர்வதேசத்தில் அவருக்கு காணப்படும் வலைமைப்பின் மீதே கூடுதலாக கவனம் செலுத்தப்பட்டு டுபாய் மற்றும் இலங்கை பாதுகாப்பு தரப்புகள் நடவடிக்கைகளை எடுத்தன.
மறுப்புறம் இரத்தினக்கல் கொள்ளையிட்ட சம்பவத்தில் மாக்கந்துர மதுஷின் மற்றுமொரு முக்கிய சகாவான ரமால் என்றழைக்கப்படும் சந்தேகநபர் ஓருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரிடமிருந்து முக்கிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் அதனூடாகவும் விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.