அதிகாரத்தை பகிர்ந்து தீர்வுகளை நோக்கி பயணிக்க ஏதேனும் திருத்தங்கள் கொண்டுவந்தால் அதற்கு நாம் முழுமையான ஆதரவை வழங்குவோம். ஆனால் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு இது சரியான தருணமல்ல என அமைச்சர் ரவூப் ஹகீம் தெரிவித்தார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் 20 ஆம் திருத்த சட்டம் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
நிறைவேற்று அதிகாரத்தை நீக்கும் சரியான தருணம் இது அல்ல, இப்போது ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்கான காலகட்டம் நிலவி வருகின்ற நிலையில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவது என்பது சரியானதல்ல.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் இதனை கையில் எடுக்கப்பார்க்கின்றனர். திகார பரவலாக்கல் குறித்து ஏதேனும் திருத்தங்கள் கொண்டுவந்து அரசியல் முரண்பாடுகளுக்கு தீர்வை எட்ட நினைத்தால் அதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளோம்.
ஆனால் இப்போது நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை கையில் எடுக்க வேண்டாம். இது ஒரு சிலரது தனிப்பட்ட தேவைக்காக மட்டுமே கையாளப்படுகின்றது. ஆகவே அதற்கு ஆதரவு வழங்க போவதில்லை என்றார்.