நிறைவேற்று அதிகாரத்தை நீக்கவும், புதிய அரசியல் அமைப்பின் மூலமாக நாட்டினை பிளவுபடுத்தவும் எமது தலைமைகள் செயற்படுமென்றால் நான் இந்த அணியில் இருந்து வெளியேறுவேன் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
அத்துடன் அடுத்த தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவையே ஜனாதிபதியாக்குவோம். அதற்கு மஹிந்தவின் புகைப்படம் போதும் வேறு தலைமைத்துவம் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
நிகழ்கால அரசியல் செயற்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்.
வரவு செலவு திட்டத்தை வெற்றி கொள்வதில் அரசாங்கம் தடுமாறுகின்றது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தக்கவைக்க முடியாத நிலைமை உருவாக்கியுள்ளது. அதேபோல் அடுத்த தேர்தல்களை சந்திக்கவும் ஐக்கிய தேசிய கட்சி தடுமாறி வருகின்றது. இந்நிலையில் அதிகாரத்தை பகிரவும், நிறைவேற்று அதிகாரத்தை நீக்கவும் முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.
வடக்கு மக்கள் வாழ்வாதார பிரச்சினையை கேட்கின்றனர். கல்வியை கேட்கின்றனர், அபிவிருத்தியை கேட்கின்றனர், பாடசாலை, வீடு உள்ளிட்ட அடிப்படை தேவைகை பெற்றுத்தரக் கேட்கின்றனர். ஆனால் சம்பந்தன் சமஷ்டி தான் வேண்டும் என நிற்கின்றார். அதேபோல் எதிர்க்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ இல்லமும் இரண்டு வாகனமும் சம்பந்துக்கு வேண்டுமாம். மக்களின் தேவைகளுக்கு முன்னர் தனக்கான சலுகைகளை பெற்றுக்கொள்ளவே சம்பந்தன் முயற்சிகின்றார். இதுதான் தமிழ் தலைமைகளின் நிலைமை என்றார்.