நீர்கொழும்பு கடற்பிரதேசத்தில் சட்டவிரோதமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் ஒருவர் நேற்று (02) கைது செய்யப்பட்டுள்ளார்.
கடற்படையினரால் வழங்கப்பட்ட இரகசிய தகவலின் அடிப்படையில், கடலோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து, நீர்கொழும்பு கடற்தொழில் அலுவலக அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 242 கிலோ கிராம் சுறா மீன்களும், 17 கிலோ கிராம் அதனது வெட்டப்பட்ட உடற் பாகங்களும் , மீன்களைப் பிடிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் இயந்திரப் படகு என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு கடற்தொழில் அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.