ஐக்கிய தேசிய கட்சிக்கு வலுசேர்க்கும் வகையிலே மக்கள் விடுதலை முன்னணி தற்போது 20 ஆம் அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்ற முயற்சிகளை மேற்கொள்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவரர்தன தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நிச்சயம் நீக்க வேண்டும். ஆனால் அதற்கான சூழல் இதுவல்ல, முதலில் நாட்டில் நிலையான அரசாங்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இதன் பிறகே தற்போது குறிப்பிடப்படுகின்ற விடயங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.
எனவே மக்கள் விடுதலை முன்னணியின் நோக்கங்களுக்கு எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ துணைபோக மாட்டார் என்ற நம்பிக்கையுள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.