திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி, விடுதலைப் புலிகளின் கோரிக்கைக்கு அமைய, வட- கிழக்கு மாகாண சபையை கலைக்குமாறு தனக்கு தூது அனுப்பியிருந்ததாக வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர், நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடியை ஏற்றி, மாகாண சபையை கலைக்கவில்லை. வடக்கு கிழக்கு மாகாண சபைக்கான உத்தியோகப்பூர்வ கொடியை ஏற்றியே, அங்கிருந்து வெளியேறியிருந்தேன். வடக்கு கிழக்கு மாகாண சபையை கலைப்பதற்காக அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பல்வேறுப்பட்ட முயற்சிகளை முன்னெடுத்திருந்தனர்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி, விடுதலைப் புலிகளின் கோரிக்கைக்கு அமைய மாகாண சபையை கலைக்குமாறு எனக்கு தூது அனுப்பியிருந்ததார்.அவ்வாறு பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட போதிலும், மாகாண சபையை கலைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. எனினும், இந்திய இராணுவம் இலங்கையை விட்டு வெளியேறும் போது எனக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்பட்டமையை கருத்திற் கொண்டே அந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தேன் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.