ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட பிரேரணையை தோல்வியடையச் செய்வதற்கான எந்தவிதத் தேவையும் இல்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் கலாநிதி ஹர்ஷ த சில்வா தெரிவித்தார்.
ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து எடுத்துச் செல்லும் இந்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிப்பது குறித்து கட்சி சார்பாக எந்தவிதத் தீர்மானமும் எடுக்கப் படவில்லை. ஜனாதிபதியின் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பது என்பது வெவ்வேறு இடங்களில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் மாத்திரமே எனவும் அவர் மேலும் கூறினார்.
முஜிபுர் ரஹ்மான் எம்.பி. ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக தெரிவித்த கருத்துக் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் அமைச்சர் ஹர்ஷவிடம் வினவிய போதே இவ்வாறு பதிலளித்தார்.