இலங்கை மக்கள் ஜப்பான் மீது மிகுந்த விருப்பம் கொண்டுள்ளனர்- சஜித்

310 0

இலங்கை மக்கள் ஜப்பான் மீதும், அந்நாட்டு கலாச்சாரம் மீதும் மிகுந்த விருப்பம் கொண்டுள்ளதன் காரணமாக இலங்கை மக்களுக்கு ஜப்பானிய கலாசாரம் தொடர்பான தெளிவான புரிந்துணர்வை ஏற்படுத்த விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் அவசியம் குறித்து வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார். 

கொழும்பில் நேற்று (02) மாலை இடம்பெற்ற ஜப்பான் கலாசார நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகிரா சுஹியாமாவிடம் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார் 

இந்த நாடுகளுக்கு இடையிலான உறவு வலுப்படுவது கலாசார தொடர்புகளினாலேயே என்று தெரிவித்துள்ள அமைச்சர் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் காணப்படும் நீண்டகால நட்புறவை மேலும் உறுதிப்படுத்தும் நோக்கில் இலங்கையில் ஜப்பான் கலாசார மத்திய நிலையம் மற்றும் மொழிக் கல்வி மத்திய நிலையத்தை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் சஜித் பிரேமதாச கேடடுக்கொண்டார்.