தனது 3 மாத சம்பளம் மூலம் 636 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
ராஜபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன், இவர் தனது மாத ஊதியத்தை மக்களுக்காக வழங்கி வருகிறார். அதன்படி 32, 33 மற்றும் 34-வது மாத ஊதியத்தில் இருந்து மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார் களுக்கு நல உதவிகளை வழங்கினார்.
ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் அரிசி பைகள், பழங்கள் மற்றும் நிதி என 636 பயனாளிகளுக்கு வழங் கப்பட்டது.
விழாவில் தங்கப்பாண்டி யன் எம்.எல்.ஏ. பேசுகையில், தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதியோர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கப்படும் 1,000 ரூபாய் உதவித்தொகையை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப் படும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பேறு காலத்திற்கு முன்பும் பின்பும் உள்ள 3 மாதங் களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்தி பேறுகாலத்திற்கு முன்பும் பின்பும் 6 மாதம் வீதம் 12 மாதங்களுக்கும் வழங்கப்படும் என்றார்.
விழாவில் நகர செயலாளர் ராமமூர்த்தி ஒன்றிய செயலாளர் தங்கசாமி, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தனுஷ்குமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சுமதி, ராமமூர்த்தி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் வேல் முருகன் , லையன்ஸ் கிளப் ஆனந்த், கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.