நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை நீக்கி பாராளுமன்ற முறைமையை உருவாக்கும் 20 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தினை நிறைவேற்றும் ஜே.வி.பி.யின் தீவிர முயற்சிக்கு ஐக்கிய தேசிய கட்சி பச்சைக் கொடி காட்டியுள்ள போதிலும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.
20 ஆம் திருத்தத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளுடன் அடுத்த வாரம் ஜே.வி.பி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அதன் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணி நிறைவேற்றதிகார முறைமையை நீக்குவதற்கு உடன்பாடில்லை என்றவாறு கருத்துக்களை வெளியிட்டுள்ளது.