எதிர்வரும் வெசாக் தினத்திற்குள் கசிப்பு பாவனை, அது குறித்த வியாபாரங்கள் முற்றாக ஒழிக்கப்படுமென ஜனாதிபதி உறுதியளித்ததாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, மாத்தளை மாவட்டங்களில் கசிப்பு விற்பனை மற்றும் பாவனைகள் அதிகரித்துள்ளமை குறித்து பாதுகாப்பு அமைச்சின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட போதே அமைச்சரிடம் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
ஜனாதிபதி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் , அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு செயலாளர்,முப்படை தளபதிகள், பதில் பொலிஸ் மா அதிபர் உட்பட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், அரசாங்க அதிகாரிகள் கலந்துகொண்ட பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனக் கூட்டத்தில் அமைச்சர் மனோ கணேசனிடம் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்