அனுராதபுர மாவட்டத்தில் இனம் காணப்படாத சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கடவத ரத்மல, ஹொரவபொத்தான – பத்தாவ, கியுல்லுகட, மெதவாச்சிய சந்தி, கஹடகஸ்திலிய ஆகிய பிரதேசங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கான நீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று பொது மக்களின் பாவனைக்கு திறந்து வைத்தார்.
வட மத்திய மாகாணத்தில் பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் இனம்காணப்படாத சிறுநீரக நோய் நீண்டகாலமாக இருந்து வருகிறது. இதற்கான தற்காலிக நிவாரணமாக சுத்தமான குடிநீரை பெரும்நோக்கில் குறித்த மாவட்டங்களில் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவி வருகிறோம்.
இவ்வாறான 1000 நீர் சுத்திகரிப்பு நிலையங்களை இந்த வருடத்துக்குள் நாடு முழுவதிலும் நிறுவவுள்ளோம். இதில் இன்னும் 25 திட்டங்கள் அனுராதபுர மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன்போது குறிப்பிட்டர்.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இஷ்ஹாக் ரகுமான், கட்சியின் அனுராதபுர மாவட்ட அமைப்பாளர் ரவுத்தார் நைனா முஹம்மத், கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான ரபீக், முபாரக், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.