காணிகளை மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தி கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

318 0

யுத்தத்தில் இடம்பெயர்ந்த மக்களின் காணி உரிமைகளை உறுதி செய்யும் நோக்கில் அரசுக்கு அழுத்தம்  கொடுக்கும் நோக்கில் வியாபாரிமுனை பருத்தித்துறையைச் சேர்ந்த, வலி வடக்கு இடம்பெயர்ந்தோர் மக்கள் ஒன்றியத்தினர் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.
காணி விடுவிப்பு தொடர்பான போராட்டங்களில் ஈடுபட்டு வரும் முல்லைத்தீவு, கேப்பாபுலவு, யாழ் வலி வடக்கு, மயிலிட்டி. மற்றும் பலாலி மக்களைப் போலவே தொடர் உண்ணா விரதத்தில் ஈடுபட்டுள்ள மன்னார் சிலாவத்துரை மக்களினதும் , பல வருடங்களாக சட்டத்தின் மூலம் நீதியைப் பெற்றுக் கொள்வதற்காக போராடும் பள்ளிமுனை மக்களினதும் காணி உரிமையும் கடற்படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள முள்ளக்குளம், சம்பூர், பானம, அஸ்ரப் நகர் மக்களின் காணிகளையும் அவர்களுக்கு மீள கையளிக்குமாறும் அரசாங்கத்திடம் வலியுறுத்துவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இதன்போது தெரிவித்தனர்.