ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு சிறிலங்காவில் இருந்து அரசாங்க குழு ஜெனிவாவுக்கு செல்லாது என்ற சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தற்போதைய கூட்டத்தொடரில், சிறிலங்கா தொடர்பான விவாதம் வரும் 20ஆம் நாள் நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கலந்துரையாடிய பின்னர், உயர்மட்டக் குழுவை இங்கிருந்த அனுப்புவதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சரோஜா சிறிசேன தெரிவித்தார்.
ஜெனிவாவில் உள்ள சிறிலங்காவின் வதிவிடப் பிரதிநிதி ஏ.எல்ஏ.அசீஸ் மற்றும் அவரது அதிகாரிகளையே இந்த அமர்வை கையாளுமாறு வெளிவிவகார அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.