முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை இலங்கைக்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பு பிரதமருடையது என்று அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
எனினும் அது சம்பந்தமாக பிரதமரை நேரடியாக குற்றம் சுமத்துவது தவறாகும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
கொழும்பு பிரதேசத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போதே அமைச்சர் மனோ கணேசன் இதனைக் கூறியுள்ளார்.