விடுதலைப்புலிகளாலும், மக்களாலும் அங்கீகரிக்கப்படாத ஜனநாயக போராளிகள் கட்சி,ஜ.நா.விற்கு சென்று இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு முண்டு கொடுக்கப்போகின்றதாவென கேள்வி எழுந்துள்ளது.
நடக்கவிருக்கும் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா.வின் கூட்டத்தொடரில் ஜனநாயக போராளிகள் கட்சி தாம் பங்குபெறுவதுபற்றி கூட்டமைப்புடன் ஆராய்ந்து வருவதாக அக்கட்சின் ஊடகப்பேச்சாளரான துளசி என்பவர் சில தினங்களுக்கு முன்பு கூறியுள்ளார்.
முன்னாள் போராளிகள் சொல்லொணா துன்பங்களுடன் தாயகத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.இதுவரை இந்த போராளிகளில் 50 போராளிகளையோ அல்லது 100 பொது மக்களையோ எமது தாயகத்தில் ஒருங்கிணைத்து தமது அரசியல் கட்சி சார்ந்து செயற்படமுடியாத இந்த போராளிகள் கட்சி இருக்கின்றது.
மேலும் இந்த கட்சியினர் இன்றுவரை எமது போராளிகளாலும்,மக்களாலும் தாயகத்தில் நிராகரிக்கப்பட்டு பாரிய விமர்சனங்களை தாங்கிய ஓர் கொள்கைப்பற்றற்ற 4 நபர்களைக்கொண்டிருக்கும்போது, இவர்களால் ஐ.நா.வில் எமது மக்களின் கண்ணீருக்கான சாட்சியமாகத்தோன்றி இறுதிப்போரின் உண்மை நிலவரங்களை எடுத்துரைக்கமுடியுமா?என்பதும் பெருத்த சந்தேகமே.
மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த கட்சியின் ஊடகப்பேச்சாளர் துளசி ,அரசினால் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை இலங்கை அரசு ஒருவேளை விடுவிக்குமானால்’ இலங்கை அரசின் போர்குற்றங்களை தாம் மறந்து ஐ.நா.வில் விடுதலைப்புலிகள் சார்பாக போர்க்குற்றங்களில் இருந்து இலங்கை அரசை காப்பாற்றுவோம் என்றும் ஓர் குதர்க்ககரமான தகவலினை அங்கு தெரிவித்திருந்தார்.
அத்துடன் இன்றுவரை எமது மக்களின் பிரச்சனைகளை தீர்க்க புலம் பெயர் உறவுகள் அனுப்பும் நிதிகளையும், பொருட்களையும் ஏப்பமிட்டு இலங்கை அரசுடனும் கூட்மைப்பினருடனும் இணைந்து பயணிக்கும் இந்த நான்கு நபர்களைக்கொண்ட கட்சியினால் ஐ.நா.வில் ஒருபோதும் எமக்காக குரல்கொடுக்கமுடியாது என முன்னாள் போராளிகள் பலரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும் இன்றுவரை போராளிகளின் வாழ்வியல் பிரச்சனைகளிலும் அடிமட்ட மக்களின் வாழ்வியல் நலன்களிலும் எந்தவித கரிசனையும் கொள்ளாது,இவை அனைத்தையும் மறந்து மதுவினை அருந்திக்கொண்டு போதையில் சுயநினைவின்றி தேசியம் பேசும் இவர்களால்,ஐ.நா.விற்கு புலிகள் சார்ந்து பயணித்து எதையும் கௌரவமாக சாதிக்கப்போவது கிடையாது.
இன்று கூட்டமைப்பானது தான் இலங்கை அரசை பாதுகாக்க அவர்கள் கொடுத்த எலும்பு துண்டினை முகர்ந்துவிட்டு அதற்கு விசுவாசமாக தன்னாலன பங்களிப்பை செய்துவருவது நம் அனைவருக்கும் தெரிந்த விடயமே.
அத்துடன் எமது காணமல்போன உறவுகளின் போராட்டத்தை இழிவுபடுத்தி அதன் ஊடாக தமக்கான அழியா புகழை தேடிக்கொண்ட கூட்டமைப்பினர் இன்று தமது சுகபோக வாழ்விற்கும் சுயநல தேவைக்கும் அடிமைப்பட்ட இந்த நான்கு நபர்களைக்கொண்ட போராளி கட்சியை பயன்படுத்தி,ஐ.நா.வில் இலங்கைக்கு ஆதரவான கூற்றுக்களை புலிகள் சார்ந்து தெரிவிப்பதற்கு முயற்சிக்கிறார்கள் .
எனவே எமது மக்களும்,போராளிகளும் தாம் துரிதமாக சிந்தித்து விடுதலைப் புலிகள் சார்ந்து ஐ.நா.விற்கு செல்லமுனையும் இந்த போலியான நபர்களை நிராகரிக்கவேண்டியது மிகவும் அவசியமானது.
ஆகவே ஐ.நா.விற்கு புலிகளாக இவர்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அழைத்துச்சென்று தமது இதுவரைக்குமான துரோகங்களை மூடிமறைக்க புலிகளின் நிலைப்பாடாக இந்த கட்சியை த.தே.கூட்டமைப்பு தாம் தந்திரமாக பயன்படுத்தி இலங்கை அரசினை காப்பாற்றப்போவதை மக்களே உணர்ந்துகொள்ளுங்களென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நன்றி தாரகம்.