நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்குவதற்கு யார் பிரேரணை கொண்டுவந்தாலும் அதற்கு ஆதரவளிக்க ஐக்கிய தேசிய கட்சி எந்த சந்தர்ப்பத்திலும் தயாராவுள்ளதாக அமைச்சர் பீ. ஹரிசன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
தற்போது 20 ஆவது திருத்தம் ஊடாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாமலாக்க மக்கள் விடுதலை முன்னணி நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதுதொடர்பாக அந்த கட்சி அனைத்து கட்சிகளுடனும் கலந்துரையாட இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
எனவே ஐக்கிய தேசிய கட்சியை பொறுத்தவரை நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாமலாக்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளது என்றார்.