தொழிலுரிமைக்காக போராடிய அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளின் ஊடாக தாக்கப்பட்டமை வன்மையாக கண்டிக்கத்தக்கது என பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிசாந்த டிசில்வா தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
பல்வேறு கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி நேற்று அதிபர்கள், ஆசிரியர்கள் கல்வி அமைச்சின் முன்னிலையில்போராட்டத்தை முன்னெடுத்தபோது, போராட்டத்தை அடக்க அரசாங்கம் மேற்கொண்ட விதம் முற்றிலும் அநாகரிகமானது.
தற்போது அரசாங்கத்திற்கு எதிராக அனைத்து தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர். இதுவே அரசாங்கத்திற்கு பாரிய நெருக்கடியினை ஏற்படுத்தும் என்றார்.