எல்லை நிலவரம் குறித்து நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில், நவாஸ் ஷெரீப்புக்கு பாகிஸ்தானின் அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்யக் கூடாது என்று கூட்டறிக்கை வெளியிட்டன.
காஷ்மீரின் உரி ராணுவ முகாமில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. இதனால் இரு நாடுகளிடையே எழுந்துள்ள பதற்றம் குறித்து ஆலோசிப்பதற்காக, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையில், பாகிஸ்தான் பாராளுமன்ற அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், பிரதான எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ உள்பட முக்கியமான கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
நவாஸ் ஷெரீப் பதவி விலக வலியுறுத்தி வரும் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான், இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும், அவரது கட்சி சார்பில் ஷா மெகமத் குரேஷி என்ற மூத்த தலைவரை அனுப்பிவைத்திருந்தார்.கூட்டத்தில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டு நிலவரம் குறித்து நவாஸ் ஷெரீப்பும், வெளியுறவு செயலாளர் அய்ஜாஸ் அகமதுவும் விளக்கி கூறினர். கூட்டத்தில் பேசிய அனைவரும் பாகிஸ்தான் அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
பின்னர், அனைத்து கட்சி தலைவர்கள் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-எல்லை பகுதியில் இந்தியாவின் அத்துமீறலுக்கும், போர் நிறுத்தத்தை தொடர்ந்து மீறி வருவதற்கும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த செயல், பிராந்திய அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
காஷ்மீர் மக்களின் எழுச்சியை நசுக்க தாங்கள் நடத்தி வரும் அடக்குமுறைகளில் இருந்து கவனத்தை திசைஎல்லை நிலவரம் குறித்து நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில், நவாஸ் ஷெரீப்புக்கு பாகிஸ்தானின் அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்யக் கூடாது என்று கூட்டறிக்கை வெளியிட்டன.
காஷ்மீரின் உரி ராணுவ முகாமில் நடந்த தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. இதனால் இரு நாடுகளிடையே எழுந்துள்ள பதற்றம் குறித்து ஆலோசிப்பதற்காக, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையில், பாகிஸ்தான் பாராளுமன்ற அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், பிரதான எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ உள்பட முக்கியமான கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
நவாஸ் ஷெரீப் பதவி விலக வலியுறுத்தி வரும் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான், இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும், அவரது கட்சி சார்பில் ஷா மெகமத் குரேஷி என்ற மூத்த தலைவரை அனுப்பிவைத்திருந்தார்.கூட்டத்தில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டு நிலவரம் குறித்து நவாஸ் ஷெரீப்பும், வெளியுறவு செயலாளர் அய்ஜாஸ் அகமதுவும் விளக்கி கூறினர். கூட்டத்தில் பேசிய அனைவரும் பாகிஸ்தான் அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
பின்னர், அனைத்து கட்சி தலைவர்கள் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
எல்லை பகுதியில் இந்தியாவின் அத்துமீறலுக்கும், போர் நிறுத்தத்தை தொடர்ந்து மீறி வருவதற்கும் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த செயல், பிராந்திய அமைதிக்கும், பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.காஷ்மீர் மக்களின் எழுச்சியை நசுக்க தாங்கள் நடத்தி வரும் அடக்குமுறைகளில் இருந்து கவனத்தை திசைதிருப்புவதற்காக, எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்ற போலி குற்றச்சாட்டை இந்தியா கூறி வருகிறது.
மேலும், தண்ணீரை ஆயுதமாக பயன்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தன்னிச்சையாக ரத்து செய்ய விரும்புகிறது. அந்த ஒப்பந்தத்தில் பாகிஸ்தானின் உரிமையை விட்டுத்தர மாட்டோம். தன்னிச்சையாக ரத்து செய்தால், அதை ஆக்கிரமிப்பு செயலாக கருதுவோம் என்று எச்சரிக்கிறோம்.
மேலும், பலுசிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவின் தலையீட்டுக்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறோம். இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் எடுக்கும் முயற்சிகளை இந்தியா நிராகரித்து வருகிறது. ‘சார்க்’ மாநாட்டையும் புறக்கணித்துள்ளது. இது வருந்தத்தக்கது.
காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பதில் பாகிஸ்தான் ஒன்றுபட்டு நிற்கிறது. இந்தியாவுடனான பிரச்சினைகளில் பாகிஸ்தான் அரசுக்கு முழு ஆதரவு அளிப்போம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.திருப்புவதற்காக, எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்ற போலி குற்றச்சாட்டை இந்தியா கூறி வருகிறது.
மேலும், தண்ணீரை ஆயுதமாக பயன்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது. சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தன்னிச்சையாக ரத்து செய்ய விரும்புகிறது. அந்த ஒப்பந்தத்தில் பாகிஸ்தானின் உரிமையை விட்டுத்தர மாட்டோம். தன்னிச்சையாக ரத்து செய்தால், அதை ஆக்கிரமிப்பு செயலாக கருதுவோம் என்று எச்சரிக்கிறோம்.
மேலும், பலுசிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவின் தலையீட்டுக்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறோம். இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் எடுக்கும் முயற்சிகளை இந்தியா நிராகரித்து வருகிறது. ‘சார்க்’ மாநாட்டையும் புறக்கணித்துள்ளது. இது வருந்தத்தக்கது.
காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பதில் பாகிஸ்தான் ஒன்றுபட்டு நிற்கிறது. இந்தியாவுடனான பிரச்சினைகளில் பாகிஸ்தான் அரசுக்கு முழு ஆதரவு அளிப்போம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.