சட்டவிரோத முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டோர் தப்பி ஓட்டம்

301 0

கெற்­பெலி பனங்­காட்­டுப் பகு­தி­யில் பட்­டப்பக­லில் அனு­ம­திப் பத்­தி­ர­மின்றி மணல் அகழ்ந்­த­வர்­கள் பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாக­னத்­தைக் கைவிட்­டுத் தப்­பி­யோ­டி­யுள்­ள­னர். 

குறித்த சம்­ப­வம் நேற்று வியாழக்கிழமை இடம்­பெற்­றுள்ளது.

கொடி­கா­மம் பொலி­ஸா­ருக்குக் கிடைத்த தக­வ­லை­ய­டுத்து பதில் பொறுப்­ப­தி­காரி தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வி­னர் மணல் அகழ்வு இடம்­பெற்ற இடத்­துக்­குச் சென்­ற­போது ஒரு உழவு இயந்­தி­ரத்­தில் ஏற்­றப்­பட்ட மண­லைக்­கொட்டி­விட்டு அவர்­கள் தப்­பி­யோ­டி­யுள்­ள­னர்.

மற்றைய உ­ழவு இயந்­தி­ரத்­தில் மணல் ஏற்­றி­ய­வர்­கள் வாக­னத்­து­டன் தப்­பி­யோட முயற்சித்­த­ போது பொலி­ஸார் விரைந்து செல்­லவே வாக­னத்­தைக் கைவிட்டுத் தப்­பி­யோ­டி­யுள்­ள­னர்.

குறித்த வாக­னத்தை மீட்ட பொலி­ஸார்  சாவ­கச்­சேரி நீதி­மன்­றில் ஒப்படைத்துள்ளனர்.