பாகிஸ்தானை பயங்கரவாத நாடாக அறிவிக்க அமெரிக்காவில் கையெழுத்து வேட்டை

348 0

201610040901367323_petition-in-us-to-declare-pakistan-terror-sponsor-receives_secvpfபாகிஸ்தானை, ‘பயங்கரவாத நாடு’ என அமெரிக்கா அறிவிக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்ட நிலையில் 2 வாரங்களுக்குள்ளாகவே 5 லட்சம் பேரின் கையெழுத்தை அது பெற்று விட்டது.

இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் பயங்கரவாத செயல்களை அரங்கேற்றும் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வரும் பாகிஸ்தானை, ‘பயங்கரவாத நாடு’ என அமெரிக்கா அறிவிக்க வலியுறுத்தி அங்கு கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. ‘ஆர்.ஜி.’ என தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட ஒருவர் கடந்த 21-ந்தேதி இதற்கான புகாரை தயாரித்து வெளியிட்டார்.

இந்த புகாருக்கு அமெரிக்கர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு காணப்படுகிறது. புகார் தயாரிக்கப்பட்ட 2 வாரங்களுக்குள்ளாகவே 5 லட்சம் பேரின் கையெழுத்தை அது பெற்று விட்டது. வருகிற 21-ந்தேதி வரை கால வரையறை நிர்ணயிக்கப்பட்டு உள்ளதால், அதற்குள் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் கையெழுத்தை எளிதாக பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோன்ற புகார்கள் 1 லட்சம் பேரின் கையெழுத்தை பெற்றாலே அது குறித்து 30 நாட்களுக்குள் வெள்ளை மாளிகை நிர்வாகம் பதிலளிக்க வேண்டும். அந்தவகையில் இந்த புகார் மீது ஒபாமா நிர்வாகம் விரைவில் பதிலளிக்கும் என தெரிகிறது. இதைப்போல பயங்கரவாத பாகிஸ்தானை வன்மையாக கண்டிக்க வலியுறுத்தி இங்கிலாந்திலும் கையெழுத்து வேட்டை நடத்தப்படுகிறது. இதற்காக தயாரிக்கப்பட்ட புகார் 10 ஆயிரம் கையெழுத்தை பெற்று விட்ட நிலையில், இது குறித்து பாராளுமன்ற பொதுச்சபையில் விவாதம் நடத்தப்படும் என தெரிகிறது.