குப்பைகளுக்கு நடுவே அமரர் சிவசிதம்பரத்தின் சிலை

352 0

நெல்லியடி நகரில் அமைக்கப்பட்டுள்ள அமரர் சிவசிதம்பரத்தின் உருவச் சிலை உரிய பராமரிப்பின்றி குப்பைகள் இடப்படும் இடமாகக் காணப்படுகின்ற போதிலும் உரிய தரப்பினர் இதனைக் கண்டு கொள்ளாமல் இருப்பதாக பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

முன்னாள் பிரதி சபாநாயகரும், முன்னாள் உடுப்பிட்டி தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான முருகேசு சிவசிதம்பரம் கடந்த 05.06.2002 அமரத்துவம் அடைந்தார்.

அவரின் நினைவாக நெல்லியடி நகரில் அவருக்கு உருவச்சிலை ஒன்று அமைக்கப்பட்டு 08.11.2015 அன்று அப்போதைய வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனினால் திறந்து வைக்கப்பட்டது. 

இந்நிலையில், சிலை அமைக்கப்பட்டதே தவிர அதனை உரிய தரப்பினர் அப்பகுதியை சீரான முறையில் பேணுவதில்லை என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தற்போது கழிவுகள் கொட்டப்பட்டும், செடிகள் வளர்ந்தும் காணப்படுகிறது. எனவே அவரின் உருவச்சிலை பகுதியை தூய்மையாக வைத்திருக்க வேண்டியது பொறுப்பு வாய்ந்தவர்களின் கடமையாகும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.