காவிரி வாரியம் அமைக்க எதிர்ப்பு: மத்திய அரசுக்கு நாராயணசாமி கண்டனம்

297 0

201610040952438396_narayanasamy-condemned-central-government-cauvery-management_secvpfதமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதே போல் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் பாராளுமன்றத்துக்கே உள்ளது என்றும் வாரியம் அமைக்க கால தாமதம் ஆகும் என்றும் கூறியுள்ளது.

இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதே போல் புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கால தாமதம் ஆகும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு செய்திருப்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதாகும். இது ஏற்க தக்கதல்ல.

மாநிலங்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்வு காணும் வகையில் மத்திய அரசின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். ஒரு மாநிலத்திற்கு மட்டும் சாதகமாக மத்திய அரசு செயல்படுவது தவறானது.

அதோடு மத்திய அரசின் செயல்பாடு உச்ச நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கும், நாட்டின் இறையாண்மைக்கும் எதிரானது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். காரைக்கால் மாவட்ட விவசாயிகள் நலன் கருதி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றத்திற்கு மீண்டும் வலியுறுத்துவோம்.இவ்வாறு நாராயணசாமி கூறினார்.