பசுபதிபாண்டியன் கொலை வழக்கில் கோர்ட்டில் ஆஜராகாத சுபாஷ் பண்ணையார் ஆதரவாளர்கள் 6 பேருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவன தலைவர் பசுபதிபாண்டியன் கடந்த 10.1.2012-ந் தேதி திண்டுக்கல் அருகே ஒரு கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையைச் சேர்ந்த சுபாஷ் பண்ணையார், சண்முகம், அருளானந்தம், நடராஜன், பாட்ஷா, புறாமாடசாமி, தாராசிங், ஆனந்தன், பிரபு, சன்னாசி, ராஜேஸ், நிர்மலா, கோழி அருள், அந்தோணி, ரமேஷ், அருள்மொழி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது முத்துப்பாண்டி, புறாமாடசாமி, ஆறுமுகசாமி ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். மற்றவர்கள் வழக்கு விசாரணைக்காக திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜராகி வந்தனர்.
இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராஜேஸ் பாளையங்கோட்டை சிறையில் இருந்து ஆஜர்படுத்தப்பட்டு வந்தார். மற்றவர்களுக்கு வக்கீல் மூலம் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. கோர்ட்டில் கடந்த வாயிதாவுக்கு ஆஜராகாத பாட்ஷா என்ற மாடசாமி, அந்தோணி, ஆனந்த், கோழி அருள், ரமேஷ், பிரபு ஆகியோருக்கு ஏற்கனவே செப்டம்பர் 1-ந் தேதி பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் அவர்கள் மீண்டும் ஆஜராகாததால் இவ்வழக்கு இன்னும் தொடர்கிறது. வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 24-ந் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிஉத்தரவிட்டார்.