நாட்டை காட்டிக்கொடுத்தவர்களே ஜெனிவாவுக்கு செல்ல இருக்கின்றனர். அவர்கள் தொடர்பில் எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை என முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
இம்முறை ஜெனிவாவுக்கு செல்லக்கூடியவர்கள் தொடர்பில் எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. ஏனெனில் ஜனாதிபதிக்கு நம்பிக்கையான எவரும் செல்லாமாட்டார்கள். நாட்டை காட்டிக்கொடுத்தவர்ளே செல்வார்கள்.
அதனால் இம்முறை ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக மோசமான தீர்மானங்கள் எடுக்க வாய்ப்பு இருக்கின்றது. அதனால் நாட்டின் இறையான்மை, சுயாதீனத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நாட்டு மக்களுக்கு இருக்கின்றது. அதனை இந்த அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்க முடியாது என்றார்.