4000 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,பொலிஸ் திணைக்களத்தில் நிலவும் கடைநிலை தரங்களுக்கான வெற்றிடங்கள் இரண்டு மாதங்களில் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளார்.நீண்ட காலமாக கடைநிலை தரங்களுக்கு நிலவி வரும் வெற்றிடங்கள் நிரப்பப்படவில்லை.எதிர்வரும் 10ஆம் திகதியின் பின்னர் பதவி உயர்விற்கான நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
பொலிஸ் தலைமையகம் மற்றும் ஏனைய மாகாண மட்டத்தில் நடத்தப்பட உள்ளது. நேர்முகத்தேர்வுகளில் சுமார் 30000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தோற்றுவார்கள் இதில் 4000 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளனர்.பொலிஸ் கான்ஸ்டபிள் முதல் சார்ஜன்ட் வரையிலான பதவிகள் பொலிஸ் பரிசோதர்கள் உப பொலிஸ் பரிசோதர்கள் என ஆண் பெண் இரு பிரிவிலும் சுமார் 4000 வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
தகுதியுடைய உத்தியோகத்தர்கள் எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னதாக நேர்முகத் தேர்விற்காக விண்ணப்பம் செய்ய முடியும் என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.