தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் கலை பண்பாட்டுக் கழகத்தின் ஆதரவில் பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் 10 ஆவது ஆண்டாக தாயக விடுதலைப் பாடல்களுக்கான வன்னிமயில் – 2019 நடனப் போட்டி முதல் மூன்றுநாள் நிகழ்வுகள் கடந்த 23 ஆம், 24 ஆம் மற்றும் 25 ஆம் நாள்களில் பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான புளோமினில் பகுதியில் வெகுசிறப்பாக இடம்பெற்றன.மூன்று தினங்களும் ஆரம்ப நிகழ்வாக மாவீரர் திரு உருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டு, அகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகியிருந்தன. பிரதம நடுவராக ஜேர்மனி கலைபண்பாட்டுக் கழக நடன ஆசிரியரும், இராஜேஸ் நர்த்தனாலய நடன ஆசிரியருமான திருவாட்டி துஷ்யந்தி ஜெகதீஸ்வரன் அவர்கள். இவர் 20 வருடங்களாக ஜேர்மனியில் கலைப்பணியாற்றி வருகின்றார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் BA பட்டதாரியான இவர்,யாழ்.பல்கலைக்கழக நுண்கலை பீடத்தில் பட்டக் கற்கைநெறியில் தன்னை இணைத்து தொடர்ந்து அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பைத் தொடர்ந்து வருகிறார். கடந்த 30 வருடங்களாக தேசிய விடுதலைக்கான செயற்பாட்டில் தன்னை இணைத்துக் கொண்டு செயற்படுபவர்.
இரண்டாவது பிரதம நடுவராக திருவாட்டி சந்திரவதனி விஜசுந்தரம், அவர்கள், மட்டக்களப்பு விபுலானந்தர் இசை நடனக் கல்லூரி நாட்டியக்கலைமணி, அண்ணாமலைப் பல்கலைக்கழக முதுகலைமணி, தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில் PHD பட்டதாரி, சுவிஸ் திருகோணேஸ்வரா நடனாலயத்தை கடந்த 26 வருடங்களாக நடத்திவருபவர்.திருவாட்டி மீனாம்பிகை வசீகரன், யாழ்.இராமநாதன் நுண்கலைப்பீடத்தின் நாட்டியக் கலைமணி, சுவிஸ் நர்த்தகி நடனாலயத்தை கடந்த 15 வருடங்களாக நடத்தி வருபவர். யாழ் கோண்டாவில் இந்து மகாவித்தியாலயத்தில் 10 வருடம் நடன ஆசிரியராக பணியாற்றியவர்.திருவாட்டி சாவித்திரி, கடந்த 30 வருடங்களாக ஜேர்மனி கலைபண்பாட்டுக் கழகத்துடன் இணைந்து பணியாற்றி வருகின்றார்.பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் BA, MA பட்டதாரி, தஞ்சாவூர் பல்கலைக் கழகத்தில் M.Phil பட்டத்தினையும், Dr. பட்டத்திற்கான பட்டப்படிப்பைத் தொடரும் சலங்கை ஒலி நாட்டியக் கலைமாமணி நடன ஆசிரியை நாட்டியக் கலாரத்தினா. திருவாட்டி பிரமிளா தயாளன், யாழ் . இராமநாதன் நுண்கலைப் பீடம், வட இலங்கை சங்கீதசபை கலாவித்தகர், பிரான்சு புவசி சென் அன்துவான் ,சிறீமதி சுரேஸ் அனுஷா , யாழ். பல்கலைக்கழக நுண்கலைமாணி பட்டம் பெற்றவர், வட இலங்கை சங்கீதசபை கலா வித்தகர், பிரான்சு அபிநாலயம் நடன ஆசிரியர்.
முதலாம் நாள் 23.02.2019 சனிக்கிழமைஆரம்ப நிகழ்வாக 26.06.1989 அன்று ஓமந்தைப் பகுதியில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் ரூபனின் சகோதரி ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.தொடர்ந்து நடுவர்கள் அறிமுகப் படுத்தப்பட்டு மதிப்பளிக்கப்பட்டார்கள். போட்டி நடைமுறைகள் குறித்து நடுவர்களால் விளக்கமளிக்கப்பட்டு போட்டிகள் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றிருந்தன.மேற்பிரிவுபிரிவு (அ)1 ஆம் இடம் நிமலேந்திரன் கார்த்திகா2 ஆம் இடம் சிவகுமாரன் சாம்பவி3 ஆம் இடம் குலசிங்கம் கலியுகா3 ஆம் இடம் இரவோ சோனியா
பிரிவு (ஆ)1 ஆம் இடம் வைஸ்ணவி நவரத்தினம்2 ஆம் இடம் சஞ்ஜித்தா சிறீகரன்3 ஆம் இடம் தீபிகா துசிந்தன்3 ஆம் இடம் சாரங்கி மகாலிங்கம்
பிரிவு (இ)1 ஆம் இடம் காணிக்கைநாதன் ஜொய்னோல்ட்2 ஆம் இடம் ஜெகநாதன் சில்வியா3 ஆம் இடம் காணிக்கைநாதன் ஜொய்லின்3 ஆம் இடம் குணரூபன் கயதுர்க்கா
பிரிவு (ஈ)1 ஆம் இடம் மகேந்திரராஜா பார்கவி2 ஆம் இ;டம் றோமன் சாள்ஸ் மேரி லொய்சா3 ஆம் இடம் தயாபரன் சமியா3 ஆம் இடம் குலேந்திரன் ரதுஷா
பிரிவு (உ)1 ஆம் இடம் பத்மராஜா கோபிகா2 ஆம் இடம் தர்மராஜன் ஸ்ரையா3 ஆம் இடம் கஜேந்திரா அதிஷா3 ஆம் இடம் சிறிகாந்தன் ஷைந்தவி
இரண்டாம் நாள் 24.02.2019 ஞாயிற்றுக்கிழமைஆரம்ப நிகழ்வாக 13.03.2009 அன்று வலையர்மடம் பகுதியில் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கேணல் எழில்வீரனின் சகோதரர் ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.தொடர்ந்து நடுவர்களிடம் போட்டியாளர்களின் விபரம் அடங்கிய கையேடு வழங்கப்பட்டு, போட்டிகள் ஆரம்பமாகின.பாலர் பிரிவு1 ஆம் இடம் இராஜரட்ணம் ரக்ஷிதா2 ஆம் இடம் சிவநாதன் யானுஜா3 ஆம் இடம் தில்லைரூபன் மதுஷாயினி3 ஆம் இடம் விக்னேஸ்வரன் பிரணவி
சிறப்புப் பிரிவு1 ஆம் இடம் சுரேந்திரன் லாவண்யா2 ஆம் இடம் தவராஜன் மயுந்தினி3 ஆம் இடம் கணேசலிங்கம் நிலானி3 ஆம் இடம் ம்பேபி கொபின்
கீழ்ப் பிரிவுபிரிவு (அ)1 ஆம் இடம் குலச்செல்வன் காருண்யா2 ஆம் இடம் மணிவண்ணன் பிரியங்கா3 ஆம் இடம் மணிவேந்தன் துயா3 ஆம் இடம் வரதன் அதுஸ்னாபிரிவு (ஆ)1 ஆம் இடம் குணசுதன் சந்தியா2 ஆம் இடம் ராஜராஜேந்திரா லதிக்கா2 ஆம் இடம் ரஜனிகாந்தன் வர்சிதா3 ஆம் இடம் சதாசிவம் அபிநயா3 ஆம் இடம் சுபாஸ்கரன் அஸ்விகாபிரிவு (இ)1 ஆம் இடம் முருகேசு நிவேதா2 ஆம் இடம் கோபிநாத் அக்ஷயா3 ஆம் இடம் கஜேந்திரா புவிஷா3 ஆம் இடம் நடேசநாதன் சனுசியாபிரிவு (ஈ)1 ஆம் இடம் சிவலிங்கம் அதிசாயினி2 ஆம் இடம் ஜோகநாதன் பவிதா2 ஆம் இடம் ஜோன்பிள்ளை வினேகா3 ஆம் இடம் கேசவன் அக்சிதா3 ஆம் இடம் சசிதரன் ஆதிரியா
குழு கீழ்ப்பிரிவு1 ஆம் இடம் வில்நெவ் சென்ஜோஜ்2 ஆம் இடம் செவ்ரோன் தமிழ்ச்சோலை3 ஆம் இடம் அபிராமி நாட்டியஞ்சலி3 ஆம் இடம் கவின் கலையகம்குழு மத்திய பிரிவு1 ஆம் இடம் அபிராமி நாட்டியஞ்சலி2 ஆம் இடம் செல் தமிழ்ச்சோலை2 ஆம் இடம் ஆதிபராசக்தி கலைப்பள்ளி3 ஆம் இடம் குசான்வில் தமிழ்ச்சோலை3 ஆம் இடம் கவின் கலையகம்
குழு மேற்பிரிவு1 ஆம் இடம் ஆதிபராசக்தி கலைப்பள்ளி2 ஆம் இடம் குசான்வில் தமிழ்ச்சோலை2 ஆம் இடம் வெர்சாயி தமிழ்ச்சோலை3 ஆம் இடம் அபிராமி நாட்டியஞ்சலி3 ஆம் இடம் கவின் கலையகம்குழு அதிமேற்பிரிவு1 ஆம் இடம் கவின் கலையகம்2 ஆம் இடம் சோதியா கலைக்கல்லூரி3 ஆம் இடம் ஒள்னே சூ புவா தமிழ்ச்சோலை3 ஆம் இடம் திரான்சி தமிழ்ச்சோலை
மூன்றாம் நாள் 25.02.2019 திங்கட்கிழமைஆரம்ப நிகழ்வாக 1998 ஆம் ஆண்டு நாகர்கோவில் பகுதியில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்டினன் சின்னவீரனின் சகோதரர் ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.தொடர்ந்து நடுவர்களிடம் போட்டியாளர்களின் விபரம் அடங்கிய கையேடு வழங்கப்பட்டு , போட்டிகள் ஆரம்பமாகின .இன்றைய போட்டிகளில் மத்திய பிரிவுப் போட்டியாளர்களின் ஐந்து பிரிவுகளுக்கு போட்டிகள் இடம்பெற்றன.
போட்டிகளின் முடிவுகள் பின்வருமாறு.மத்திய பிரிவு பிரிவு (அ)1 ஆம் இடம் ஜெயகாந்தன் வனதி2 ஆம் இடம் அனன்ஜா ஜெயதாஸ்2 ஆம் இடம் டொரின் ஜாதவராஜன்3 ஆம் இடம் செபஸ்ரியன் செல்வராஜ்3. ஆம் இடம் ஜோன்பிறைன் அஜித்ரா
பிரிவு (ஆ)1 ஆம் இடம் கில்மன் வெனித்தா2 ஆம் இடம் பொன்னுச்சாமி விக்ரம்3 ஆம் இடம் ரூபகரந்தன் ருஷாசி3 ஆம் இடம் சுதாகரன் நவிதா
பிரிவு (இ)1 ஆம் இடம் வசந்தகுமார் வேதிகா2 ஆம் இடம் சிறீரங்கன் ஹரணி3 ஆம் இடம் கிருஸ்ணராஜன் கிஷானி3 ஆம் இடம் செல்வராஜன் அஸ்விகா
பிரிவு (ஈ)1 ஆம் இடம் சதீஸ்வரன் நிவேதா2 ஆம் இடம் சுமந்திரன் துளசிகா3 ஆம் இடம் ஆதவன் இலக்கியா3 ஆம் இடம் திருக்குமாரேசன் அபிசா
பிரிவு (உ)1 ஜெகதீசன் தியா2 புவனராஜா வலன்ரினா2 விவேக் ஜெர்லின்3 ரமேஸ்குமார் தரணியா3 ஜோன்பிறைன் அபினா
பிரிவு (ஊ)1 ஜெயபாலன் தருணிகா2 இராசதுரை திக்சிகா3 கனகலிங்கம் தருணிகா3 காண்டீபன் அவனிக்காதொடர்ந்து எதிர்வரும் 02.03.2019 சனிக்கிழமை திரான்சிப் பகுதியில் தெரிவுப் போட்டியும் 03.03.2019 ஞாயிற்றுக்கிழமை ஒள்னே சுபுவா பகுதியில் இறுதிப்போட்டியும் நடைபெறவுள்ளன. இந்நிகழ்வுகளிலும் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)