2020ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவார்

341 0

gotaகூட்டு எதிர்க்கட்சி எதிர்வரும் 2020ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவார் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சியில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற நிகழ்ச்சியின் கலந்துரையாடலொன்றில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்தார்.

இது என்னுடைய கருத்து மாத்திரமல்ல. கூட்டு எதிர்க்கட்சியிலுள்ள 90 வீதமானோரின் கருத்தே இதுவாகும்.

2020 ஆகும் போது நாட்டின் ஜனாதிபதி முறைமையை மாற்றாது போனால், கூட்டு எதிர்க் கட்சியின் சார்பில் கோத்தபாயவே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார். அவர் மாத்திரமே அதற்குத் தகுதியானவர்.

இதனை அறிந்தே அரசாங்கம் அவரை கைது செய்ய முயற்சி செய்கின்றது.ஜனாதிபதி முறைமையை இந்த அரசாங்கம் மாற்றினால், பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு மஹிந்த ராஜபக்சவைப் பிரதமாராக்குவோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.