முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச போலி தகவல்களை சமர்ப்பித்து, நாட்டின் நீதிமன்றத்தை கடுமையாக ஏமாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.
நேற்று கொழும்பில் இருந்து நீர்கொழும்பு வரையில் 42 மீட்டர் தூரம் எல்.எஸ்.ஆர் கொழும்பு மரதன் போட்டியில் பங்குபற்றியதன் ஊடாகவே இந்த தகவல் தெரியவந்துள்ளது.
சீ.எஸ்.என் தொலைக்காட்சி ஊடாக கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றியமை தொடர்பில் பிணையில் விடுதலையாகியுள்ள யோஷித ராஜபக்சவின் பிணை நிபந்தனையாக கடுவெல நீதிமன்றில் அவரது வெளிநாட்டு பயணங்கள் தடை செய்யப்பட்டிருந்தது.
அந்த பிணை நிபந்தனைகளை நீக்கிக் கொள்வதற்காக கடந்த 28ம் திகதி கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு மனு ஒன்றின் மூலம் அவரது முழங்கால் மற்றும் கணுக்காலில் காயமடைந்திருப்பதாகவும், அதற்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதற்காக அவுஸ்திரேலியாவில் ஒரு மாதம் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக நாட்டை விட்டு செல்வதற்கு அனுமதி வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இது தொடர்பில் அறிக்கையை ஆராய்ந்து பார்த்த கொழும்பு உயர் நீதிமன்றம் யோஷிதவுக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியது.செப்டெம்பர் மாதம் 28ம் திகதி வரையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் அளவிற்கு முழங்கால் மற்றும் கணுக்காலில் காயமடைந்திருந்த ஒருவருக்கு ஒக்டோம்பர் மாதம் 2ம் திகதிக்குள் மரதன் போட்டியில் 42 கிலோமீட்டர் தூரம் ஓட முடியுமா?
அதற்கமைய ஒவ்வொரு முறையும் பொய்யால் நாட்டை ஏமாற்றும் ராஜபக்சவின் இரண்டாவது மகன் இம்முறை நீதிமன்றத்தை ஏமாற்றியுள்ளார்.யோஷித ராஜபக்சவினால் தான் முட்டாள் ஆக்கப்பட்டமை தொடர்பில் அறிந்தே உயர் நீதிமன்ற நீதிபதி அமைதியாக இருந்தாரா என தெரியவில்லை.
யோஷித நீதிமன்றத்தை ஏமாற்றியுள்ளதனை உறுதி செய்யும் வகையிலான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.அவருக்கு வலது பக்கத்தில் கையை தூக்கிக் கொண்டு ஓடும் நாமலின் புகைப்படங்கள் தற்போது வரையில் வெளியாகியுள்ளது.