பதுளை மாவட்டம் ஊவாபரணகம பிரதேசத்திற்கு உட்பட்ட அலகொல்ல தோட்டத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 45 குடும்பங்கள் இடம் பெயர்ந்தனர்.
இந்நிலையில் தற்போது குறித்த இடம் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் நிலச்சரிவு ஆராய்ச்சி மற்றும் இடர் முகாமைத்தவ பிரிவின் முன் எச்சரிக்கை நிலச்சரிவு தடுப்புத்திட்டத்தின் மண்சரிவு பிரதேசம் என இனம் காணப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய வீடுகள் அமைப்பதற்கு பொருத்தமான காணியும் மலை இலக்கம் 13 இல் ஒதுக்கப்பட்டுள்ளது.
இருந்தும் பாதிக்கபட்ட மக்களுக்கான வீடுகளை அமைப்பதற்கான எந்ந வித நடிவடிக்கையும் முன்னெடுக்கப்படாத நிலையில் மக்கள் அச்சத்தில் வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தோட்ட மக்கள் இந்த பிரச்சனையை பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸிடம் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
அதன்படி இதற்கு திர்வாக இராஜாங்க அமைச்சரின் நேரடி கண்கானிப்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அதிகாரிகள்¸ பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளர் உட்பட அதிகாரிகள். பதுளை மாவட்ட செயலாளர்¸ ஊவாபரணகம பிரதேச செயலாளர்¸ தோட்ட முகாமையாளர் கிராமசேவகர் அடங்களாக பாதிக்கட்ட மக்களும் இடையிலான கலந்துறையாடல் தோட்ட பாடசாலையில் நடைபெற்றது.
இதன் படி கூடிய விரைவில் இவர்களுக்கான வீடுகள் அமைக்க நடிவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.