தாய்லாந்து சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா!

253 0

சுற்றுலா பயணிகளை கவருவதற்காக புதிய விசா நடைமுறையை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைவாக காணப்படும் காலப்பகுதிகளில் சுற்றுலா பயணிகளை பெருமளவில் நாட்டுக்கு அழைக்கும் வகையில் இந்த விசா நடைமுறையை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வருடத்தின் ஏனைய நிகழ்ச்சி நிரலிற்கு அமைவாக ஏப்ரல் மாதம் தொடக்கம் அக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்த வீதத்தை கொண்டிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. 

அப்படி இருந்த போதிலும் மே மாதம் தொடக்கம் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் வெசாக் மற்றும் நோன்மதி வைபவம் மற்றும் எசெல பெரஹர போன்ற பௌத்த மத வைபவங்களும் கலாசார நிகழ்வுகளும் நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதனடிப்படையில் பௌத்த மதம் பிரபலமடைந்துள்ள தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளின் பௌத்த சுற்றுலா பயணிகளை கவரக்கூடியதாகயிருக்கும் என எதிர்பாக்கப்படுகின்றது.

இந்த நிலையைக் கவனத்தில் கொண்டு இக்காலப்பகுதியில் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் 6 மாதக் காலப்பகுதிக்கு தாய்லாந்து சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா வசதிகளை வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைவாக தாய்லாந்து சுற்றுலா பயணிகளைப் போன்று ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உட்பட்ட நாடுகளான பிரிட்டன் அவுஸ்திரேலியா தென்கொரியா கனடா அமெரிக்கா சிங்கப்பூர் மலேசியா தாய்லாந்து ஆகிய நாடுகளில் சுற்றுலா பயணிகளுக்கு இந்த வசதியை வழங்குவதற்குமாக சுற்றுலா அபிவிருத்தி வன ஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ மத அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க அவர்கள் முன்வைத்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.