பிணைமுறி மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு புதிய அரசாங்கத்தினூடாக தண்டனை

260 0

மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்துக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டும் எனத் தெரிவித்த பரிவர்தனை பங்கு மற்றும் பரிவர்தனைகள் வியத்மக அமைப்பின் நிறைவேற்று குழு உறுப்பினர் நாளக கொடஹேவா, அவ்வாறு இல்லாவிட்டால் புதிய அரசாங்கத்தினூடாக  பிணைமுறி ஊழல்வாதிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

வியத்மக அமைப்பின் தலைமை காலியாலத்தில் இன்று இடம்பெற்று ஊடகவியலாளர் சந்திப்பில் காலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். 

2014 ஆம் ஆண்டாகும் போது நாட்டின் பொருளாதாரம் 7 வீதத்தால் வேகமாக வளர்ச்சியடைந்து வந்தது. ஆனால் தற்பொது நாட்டின் பொருளாதாரம் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதோடு ஆசியாவிலேயே இலங்கையின் பொருளாதார வளர்ரச்சி வீதம் வீழ்ச்சியினை சந்தித்து வருகின்றவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.