ஆட்சி மாறினாலும் இராணுவக் கட்டமைப்பில் மாற்றம் இல்லை – சம்பந்தன்

332 0

sampaஇலங்கையில் ஆட்சி மாறியிருந்தாலும், இராணுவக் கட்டமைப்பில் இன்னமும் மாற்றம் ஏற்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண உறுப்பினர் மரியாம்பிள்ளை அன்ரனி ஜெகநாதனுக்கு தனது இறுதி அஞசலியை செலுத்திய சம்பந்தனிடம், முல்லைத்தீவு உட்பட வன்னி மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பதில்லை என்று தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கேட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.