அரச நிறைவேற்று அதிகாரிகள் ஆரம்பித்துள்ள ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களது அன்றாட செயற்பாடுகளுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
அரச நிறைவேற்று அதிகாரிகளின் சங்கத்தின் தலைவர் நிமல் கருணாசிறி இதனை தெரிவித்துள்ளார்.
சட்டத்துறை அதிகாரிகளுக்கு மாத்திரம் சம்பளம் மற்றும் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராகவே குறித்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு முன்னதாக அவர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.
எனினும் அந்த கலந்துரையாடலில் தீர்க்கமான முடிவுகள் எட்டப்படாத நிலையில், இன்று காலை முதல் பணிப்புறக்கணிப்பில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கை நிர்வாக சேவை சங்கம், தேசிய இறைவரி தொழிற்சங்க ஒன்றியம், அகில இலங்கை ஆசிரியர் கல்வி சேவை சங்கம் உள்ளிட்ட 15 நிறைவேற்று அதிகாரிகளின் சங்கங்கள் குறித்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.