தான் வழங்கிய ஜோதிட ஆலோசனைக்கு அமையவே புலிகளுக்கு எதிரான போரை மஹிந்த வெற்றி கொண்டார் – ராஜபக்ஸவின் ஆஸ்தான ஜோதிடர்

353 0

09-1420777630-rajapakse35-600முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய அரசியல் சக்தி சிறப்பானதாக அமையும் என ஜோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸவின் ஆஸ்தான ஜோதிடராக செயற்பட்ட சுமனதாஸ அபேகுணவர்தனவின் ஆலோசனையால், ஜனாதிபதி பதவியை இழந்திருந்தார்.

ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த தான் கூறியதனை மாத்திரம் மனதிற்கு எடுத்துக் கொள்ளவில்லை. இந்திய ஜோதிடர்களின் ஆலோசனைக்கமையவும் செயற்பட்டமையினாலே ஆட்சியை இழந்தார்.

அந்த தேர்தலின் பின்னர் மஹிந்த தன்னுடனான உறவை கைவிட்டுள்ளார். எனினும் நான் மீண்டும் மஹிந்தவுக்கு சேவை செய்ய ஆயத்தமாக உள்ளேன்.

இந்த நேரத்தில் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக சக்தி ஒன்று கட்டியெழுப்பப்படுகின்றதனை கிரக நிலைமைக்கமைய காணமுடிகின்றது.

மஹிந்த ராஜபக்சவின் பிறப்பு கிரக நிலைமைக்கு மிகவும் ஒத்த நிலையில் கிரக நிலையில் உள்ளது.

தான் வழங்கிய ஜோதிட ஆலோசனைக்கு அமையவே மூன்று தசாப்தமாக நிலவிய போரை முடிவுக்கு கொண்ட வர முடிந்தது.

தனது வாழ்நாளின் அரைவாசி அவருடன் தான் செயற்பட்டுள்ளேன். எந்த ஒரு ஆலோசனையும் மீண்டும் வழங்குவதற்கு தான் மகிழ்சியுடன் எதிர்பார்த்துள்ளேன் என ஜோதிடர் சுமனதாஸ அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.