மதிற்பிற்குரிய பெல்ஜியம் வாழ் மாவீரர் குடும்ப உறவுகளே!
உயிரிலும் உயர்வான தமிழீழத்தாய்த் திருநாட்டின் மலர்விற்காய் செங்களமாடி கந்தகக்காற்றிலே விதையாகி வீழ்ந்து தமிழர் எம் வரலாற்றில் கருவாகி நிற்கும் உத்தமர்களின் நினைவு சுமந்து அந்தக் கல்லறைத் தெய்வங்களுக்கு மாலைசாத்தி. மலர்தூவி சுடர் ஏற்றி விடியலுக்காய் வரம்கேட்கும் புனிதநாளாம் தேசிய மாவீரர் நாள் ‘நவம்பர் 27″ இவ்வாண்டும் அதற்கே உரிய தனித்துவத்துடன் அனைத்துலகெங்கும் பரந்து வாழும் தமிழீழதேச மக்களாலும். தமிழின உணர்வாளர்களாலும் நினைவுகூரப்படவுள்ளது.
அந்தவகையில், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – பெல்ஜியம் கிளையின் ஏற்பாட்டில் வழமை போல் Zaal Bart ( Sint-Bartholomeusstraat 9, 2170 Merksem ) மண்டபத்தில் 27.11.2016 அன்று மதியம் 12:30 மணிக்கு நடைபெறவுள்ள தேசிய மாவீரர் நாள் 2016 நினைவெழுச்சி நாளில் மாவீரர் பணிமனை – பெல்ஜியம் தன் பணியை ஆற்றுவதற்காக மாவீரர் குடும்ப உறவுகளாகிய தங்களின் ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றோம்.
அதற்கமைவாக கடந்த காலங்களில் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மாவீரர்களின் திருவுருவப்படங்களை எமக்கு இதுவரை அனுப்பி வைக்காதவர்களும். தங்களால் கடந்த காலங்களில் விபரங்கள் தரப்பட்டபோதும் எமது உரிய தொடர்புகள் மேற்கொள்ளப்படாதிருப்பின் தயவு செய்து உங்களுடனான மாவீரர் குடும்ப உறவுத் தொடர்பை பேணுவதற்கு விபரங்களை 15.11.2016 இற்கு முன்னர் தந்துதவுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு :
மாவீரர் பணிமனை – பெல்ஜியம்
0032465102929
0032487334316
0032487544363
maveerar.belgium@gmail.com
” தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் ”