பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு? என்ற நிருபர்களின் கேள்விக்கு முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி பதில் அளித்தார்.
சென்னை விமான நிலையத்தில் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் என்னுடைய ஆதரவு யாருக்கு? என்பதை இப்போது சொல்ல மாட்டேன். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தெரிவிக்கிறேன்.
கடந்த தேர்தலில் என்ன முடிவு வந்ததோ? அதுபோல் தான் இந்த முறையும் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு இருக்கும்.
இவ்வாறு மு.க.அழகிரி கூறினார்.