சிகரெட், மதுபானங்களை ஊக்குவிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

237 0

சிகரெட், மது பிரசாரங்களுக்கு ஊக்கமளிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் பாலித அபயகோன் தெரிவித்துள்ளார். 

இவ்வாறான சில நாடகங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார். சட்டமா அதிபரிடம் பெற்றுக் கொள்ளப்பட்ட ஆலோசனைக்கு அமைய இவ்வாறான ஊடக நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் என்று அவர் குறிப்பிட்டார். சிகரெட், மதுபான பாவனைகளை ஒழிப்பது தொடர்பான செயலமர்வில் பேராசிரியர் பாலித அபயகோன் உரையாற்றினார். 

புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபை 2011 ஆம் ஆண்டில் அறிமுகம்செய்த சட்டத்தினால் மதுபானங்களுக்கும், சிகரெட்டுக்களுக்கும் அடிமையானவர்களின் எண்ணிக்கை தற்சமயம் 15 சதவீதம் வரை குறைவடைந்திருக்கிறது. 

85 சதவீதமானோரை இதில் இருந்து மீட்கமுடிந்திருப்பதாக பேராசிரியர் பாலித அபகோன் தெரிவித்தார். கலையை ஊடகமாக பயன்படுத்தி சிகரட், மதுபானம் போன்ற பாவனையில் இருந்து பிள்ளைகளை பாதுகாக்க வேண்டுமென்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டொக்டர் உப்பில் ஜயசேகர வலியுறுத்தினார்.