‘கம்பெரலிய’ வேலைத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கென துறைமுகங்கள்,கப்பல் துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க தலைமையில் ஐவர் அடங்கிய அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கம்பெரலிய வேலைத்திட்டத்தினை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான விசேட கலந்துரையாடலொன்று பிரதமர் ரணில்விக்ரமசிங்க தலைமையில் இன்று அலரிமாளிகையில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலின் போதே குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் அமைச்சரகளான சாகல ரத்னாயக்க, வஜிர அபயவர்தன, இராஜாங்க அமைச்சர்களான எரான் விக்ரமரத்ன, ஜே.சி.அலவதுவல, நிரோஷன் பெரேரா ஆகியோர் அடங்குகின்றனர்.