இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட இத்தாலியில் வசிக்கும் தேசப்பற்றாளர்கள் மற்றும் ஐரோப்பாவில் வாழும் இலங்கை நாட்டுப்பற்றாளர்கள் ஒன்றிணைந்து எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொள்ளவுள்ளனர்.
ஜெனீவா நகரிலுள்ள மனித உரிமைகள் பேரவை அலுவலக முன்றலில் முன்னெடுக்கப்படவுள்ள இந்த ஆர்ப்பாட்டம் ஜனநாயகத்திற்கு முரணாக தேர்தல்களைப் பிற்போடுவதற்கு எதிராகவும், நாட்டைப் பிளவுபடுத்தும் புதிய அரசியலமைப்பு மற்றும் சுயாதீன நாட்டிற்குள் அனைத்துவித சர்வதேச தலையீடுகளுக்கு எதிராகவும் எதிர்வரும் 10 ஆம் திகதி பிற்பகல் 1 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய இலங்கை தேசப்பற்றாளர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் சந்திப்பு கடந்த சனிக்கிழமை லண்டனிலுள்ள ஹவுன்ஸ்லோ றமடா ஹோட்டலில் நடைபெற்றது. இதன்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.