முல்லைத்தீவு புத்தர்சிலை வழக்கு ஒத்திவைப்பு

285 0

முல்லைத்தீவு மாவட்டத்தின் செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயவளாகத்தில் வைக்கப்பட்ட  சர்ச்சைக்குரிய புத்தர்சிலை தொடர்பான வழக்கு  மார்ச் மாதம் 15 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை முல்லைத்தீவு மாவட் டநீதிமன்றில் குறித்த வழக்கு முல்லைத்தீவு நீதிமன்றில் நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது  பௌத்தமதகுரு சார்பில் மன்றில் சமர்ப்பித்த ஆவணங்கள் மொழிபெயர்ப்பு செய்து பார்வையிட வேண்டும் எனவும்அதனால் வழக்கு  மார்ச் மாதம்  15 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. என மன்றில் முன்னிலையான  சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தெரிவித்தார்.

முல்லைத்தீவு நாயாறு நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு கடந்த  ஜனவரி  14 ஆம் திகதி அன்று பொங்கல் வழிபாடுகளுக்காக சென்ற அப் பிரதேச தமிழ் மக்களுக்கும் கோவில்வளாகத்தை ஆக்கிரமித்து குடியிருக்கும் பௌத்த பிக்குவுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டிருந்தது.

இந்த முறுகல் அமைதிக்கு பங்கத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்து முல்லைத்தீவு பொலிஸார் தாக்கல்செய்த வழக்கு ஜனவரி மாதம்  29 ஆம் திகதி நீதிமன்றில்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்தது.

எனினும் அந்த வழக்கின் அவசரதன்மை கருதி உடனடியாக வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறுகோரி ஆலய நிர்வாகத்தினர் மற்றும் தமிழர் மரபுரிமைப் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான வி.நவநீதன் ஆகியோர் சார்பாக நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இதனை ஆராய்ந்த நீதவான் ஜனவரி மாதம்  24 ஆம் திகதி வழக்கை விசாரணைக்கு எடுத்துகொள்வதாகவும் அன்றையதினம் முல்லைத்தீவு நீராவியடிபிள்ளையார் ஆலய நிர்வாகம் மற்றும் அங்கு விகாரை அமைத்துள்ள பௌத்தபிக்கு ஆகியோரை மன்றில் முன்னிலையாகுமாறும் அழைப்பாணை அனுப்பியிருந்தது.

இதனடிப்படையில் ஜனவரி மாதம் 24 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைகளில் விகாரை வளாகத்தில் புத்தர் சிலை அமைக்கப்பட்டது சட்டவிரோதமானது என்று தகவல் அறியும் சட்டத்தின் பிரகாரம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளதாக கிராம மக்களின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

இவ்வாறான சூழலில் பொலிஸார் மற்றும் தொல்பொருள் திணைக்களத்தினரின் ஆதரவுடன் சட்டவிரோதமான வகையில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை வழக்குக்கு முதல்நாளே  திறக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழ் மக்களுக்கும் பௌத்த பிக்கு உள்ளிட்ட பெரும்பான்மையினத்தவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஜனவரி மாதம் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது வழக்கினை எதிர்வரும் மார்ச் மாதம் 12 ம் திகதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி  வழக்கில் தொல்பொருள் திணைக்களபணிப்பாளரை ஆயராக உத்தரவிட்டு  தொல்பொருள் திணைக்கள பணிப்பாளரும் தான் சார்ந்த கருத்தை மன்றில் தெரிவித்திருந்தார்