தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் எதிர்த்து வாக்களித்தனர்.
11 பேரையும் தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. கொறடா சக்கரபாணி, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இதேபோல், வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, எஸ்.அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வில் டி.டி.வி.தினகரன் தரப்பில் மூத்த வக்கீல் அமித் ஆனந்த் திவாரி ஆஜராகி, இந்த வழக்கை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
அதற்கு நீதிபதிகள், ‘‘இதை விட முக்கியமான பல வழக்குகள் ஏற்கனவே விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியிடும் நிலையில் உள்ளன. இருந்தாலும் முயற்சி செய்கிறோம்’’ என்று கூறி, அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்தனர்.