நான் ஆட்சியிலிருந்திருந்தால் எழுக தமிழ் நடந்திருக்காது-மஹிந்த

363 0

mahinda_rajapakshe_said_gossiplanka1-720x480

வடக்கு மாகாண முதலமைச்சர் இனவாதத்தைத் தூண்டும் வகையில் நடந்துகொள்வதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

தமிழ் மக்கள் மத்தியில் இனவாதத்தைத் தூண்டி நாட்டில் இன மோதல்களை ஏற்படுத்தும் நோக்கிலேயே வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அண்மைக்காலமாக நடந்துகொள்வதாக முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

 

தான் ஆட்சியில் இருந்திருந்தால் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற எழுக தமிழ் பேரணிக்கு இடமளித்திருக்க மாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இன்று கொழும்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மஹிந்த ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்துள்ள அவர், அரசியல் வங்குரோத்து நிலைக்கு வட மாகாண முதலமைச்சர் தள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் தனது அரசியல் செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வதற்காக இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.

 

இனவாதக் கருத்துக்களை முன்வைத்து வட மாகாண முதலமைச்சர் மற்றும் ஏனையவர்கள் எழுக தமிழ் என்ற பெயரில் பேரணியை யாழ்ப்பாணத்தில் நடத்திய போதிலும், அதில் கலந்துகொண்ட மக்கள், தமது அன்றாட பிரச்சனைகளுக்கு தீர்வு கோரியே கலந்துகொண்டதாகவும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.