இம்முறை ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் புதிய பிரேரணை ஒன்று வரப்போவதில்லை, அவ்வாறே புதிய பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டாலும் கூட அது கடந்த கால பிரேரணைகளை விடவும் அழுத்தம் குறைந்த ஒன்றாகவே அமையும் என தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார்.
கடந்த கால ஆட்சியை போல அல்லாது இந்த ஆட்சியில் சர்வதேச நாடுகளின் ஆதரவு அரசாங்கத்திற்கு கிடைத்துள்ளது. இலங்கையின் இக்கட்டான நிலைமைகளில் சர்வதேச நாடுகளின் உதவிகளை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது. அதேபோல் இந்த அரசாங்கம் சீனா, ரஷ்யா பக்கம் இல்லாத ஆட்சியை கொண்டு நடத்துகின்ற காரணத்தினால் மேற்கு நாடுகளின் ஆதரவு உள்ளது.
அதேபோல் கடந்த காலங்களில் இதற்கு முந்தைய கூட்டத்தொடர்களில் இலங்கை அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும் மெதுவான பயணம் ஒன்றினை ஆரம்பித்தேனும் இலக்கை நோக்கி பயணிக்கின்றது என்ற காரணத்தை சர்வதேசம் ஏற்றுகொண்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.