ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அவரது ஆலோசனைகளுக்கமைய நாட்டில் போதைப்பொருள் அழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயளாலர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
போதைப் பொருள் பாவனையை ஒழிப்பதற்கான செயற்பாடுகள் ஒருபுறம் முன்னெடுக்கப்படுகின்ற அதேவேளை, மறுபுறம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் போதைப்பொருள் பாவிப்பதாக கூறி பிரசாரம் செய்கின்றனர்.
அது உண்மையாக இருந்தால் அது தொடர்பில் ஆராய்ந்து சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆகக் கூடிய தண்டனையை வழங்க வேண்டும். மாறாக இவ்வாறான கருத்தை கூறி போதைப் பொருள் பாவனையை பிரச்சாரம் செய்துவிட்டு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாவிட்டால், அது எதிர்கால சந்ததியினரையே பாதிக்கும்.
எனவே இது குறித்து குறிப்பிடுபவர்களும் செய்திகளை வெளியிடும் ஊடகங்களும் மிக அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.